சென்னை: சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘தி டார்க் ஹெவன்’ என்ற படத்தில் சித்து, தர்ஷிகா நடித்திருந்தனர். இதை பாலாஜி எழுதி இயக்கினார். இதையடுத்து அவர் எழுதி இயக்கும் ‘தி லாஸ்ட் கேஸ்’ என்ற படத்தை ட்ரீம் 7 சினிமாஸ் தயாரிக்கிறது. சித்து, தர்ஷிகா, ஜெயக்குமார் நடிக்கின்றனர்.
படம் குறித்து பாலாஜி கூறுகையில்,
‘‘கிரைம் திரில்லர் கதையுடன் படம் உருவாகிறது. இது மலைப்பகுதியில் நடக்கும் குற்றப்புலனாய்வு கதையாக இருந்தாலும், புதிய பாணி திரைக்கதையுடன் உருவாக்கப்படுகிறது. இக்கதையின் பின்னணியில் உண்மை சம்பவங்கள் மறைந்துள்ளன’’ என்றார். தர்ஷிகா கூறும்போது, ‘முந்தைய படத்தை விட இப்படம் மேலும் சிறப்பாக வரும் என்று நம்புகிறேன். இதில் மாறுபட்ட கேரக்டர் அமைந்துள்ளது’ என்றார். இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கோபால், சரண், இசை அமைப்பாளர் சக்தி பாலாஜி கலந்துகொண்டனர்.
