ஆவணக் கொலையை எதிர்த்து, கலப்பு திருமணத்தை ஆதரித்து, காதலுக்கு சாதி மதம் அந்தஸ்துகள் எல்லாம் தடை இல்லை என்ற கருவை சொல்லும் படம் இது. காதலியின் வேண்டுகோளுக்கு இணங்க திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்க்கையை தியாகம் செய்து, காதலியின் மகளை கலெக்டர் ஆக்கும் கதாநாயகனின் வாழ்க்கையே லட்சியவாதி படம்.
ரோஜா-பார்வதி என இரட்டை வேடம் ஏற்று இசபெல்லா வாழ்ந்திருக்கிறார். குழந்தை பார்வதியை கையில் வைத்துக் கொண்டு சென்னை வீதிகளில் படாத பாடுபட்டு வங்கியில் வேலைக்குச் சேர்ந்து பார்வதியை படிக்க வைக்கும் பூபாலன் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். ஐஏஎஸ் பயிற்சியாளர் ரிஷிகணேஷ், எம்.ஏ. ராஜ், ராம் ஜெய், வி.பி.வேல்முருகன், சந்திரசேகர், மணி, ஈட்டி வடிவேலு அனைவரும் தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
சில காட்சிகளில் வேகக் குறைவு என்றாலும் சமூகக் கருத்துகளை முன்வைத்து இருக்கும் இயக்குனர் பூபாலன் வெற்றி பெற்றிருக்கிறார். கிராமம் நகரம் என்று தனது ஒளிப்பதிவில் புதுமை காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் டி.மகிபாலன், பாடல்களிலும் பின்னணி இசையிலும் படத்தை சரியாக நகர்த்திச்செல்கிறார் இசையமைப்பாளர் நந்தகோபால், லக்ஷ்மணன் படத்தொகுப்பு நேர்த்தியாக உள்ளது.
