Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வழக்கறிஞராக நடிப்பதற்கு முன்பயிற்சி நீதிமன்றத்துக்கு சென்ற நிமிஷா சஜயன்

சென்னை: கருணாஸ், நிமிஷா சஜயன், விஜயலட்சுமி , பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘என்ன விலை’. தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ளார். கலாமயா பிலிம்ஸ் சார்பில் ஜித்தேஷ்.வி தயாரித்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து நிமிஷா சஜயன் கூறியதாவது:

இதற்கு முன்பு ஒரு படத்தில் வழக்கறிஞராக நடித்தேன். ஆனால், ’என்ன விலை’ படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. நீதிமன்றத்துக்கு நேரில் சென்று, அங்குள்ள வழக்கு விசாரணைகளை கவனிக்கும்படி இயக்குனர் சொன்னார். அதற்கு முன்பு, வழக்கறிஞர்கள் வாதிடும் விதம் குறித்து எனக்குள் ஒரு கற்பனை இருந்தது.

நீதிமன்றத்தில் நேரில் பார்த்தபோது, அவர்கள் பேசும் விதம், வாதிடும் முறை, அங்குள்ள சூழ்நிலை அனைத்தும் நான் நினைத்ததைவிட மிகவும் இயல்பாக இருந்தது. அந்த அனுபவமே நீதிமன்ற காட்சிகளில் நான் வசனம் பேசும் பாணியை மாற்றியது. நான் அறிமுகமான ’தொண்டிமுதலும் த்ரிக்சாஷியும்’ படத்தின் கதாசிரியர், சஜீவ் பழூர். 9 ஆண்டுகளுக்கு பிறகு அவர் எழுதி இயக்கிய ’என்ன விலை’ படத்தில் நடித்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.