சென்னை, ஆக.20: விரைவில் வெளியாகவுள்ள தமிழ் காதல் பொழுதுபோக்கு திரைப்படமான ‘லைட்வெயிட், பேபி!’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனம் ஹிதா ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டாண்ட்-அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியனும், ஒரு ஃபிட்னஸ் பிரபலமும் இணையும் இந்த வித்தியாசமான கூட்டணி, படத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைகிறது. ஃபிட்னஸ் உலகை பின்னணியாகக் கொண்டிருந்தாலும், வெவ்வேறு உலகங்களில் இருந்து வரும் இரு நபர்களின் உறவை, காதல், நகைச்சுவை, குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் தனிப்பட்ட லட்சியங்களுடன் இணைத்து இப்படம் சொல்லவுள்ளது. எழுத்து மற்றும் இயக்கம்: கே.சி. குரு. இணை தயாரிப்பாளர்: சாகரா சந்தேஷ். ஒளிப்பதிவு: பிரமோத் கொட்டியன். இசை:சரவணா சுப்ரமணியம். படத்தொகுப்பு: ஹரிஷ் கொம்மே.
+
