Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லிஜோமோலுக்கு உடல் நலம் பாதிப்பா?

சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் படங்களில் ஸ்லிம்மாக இருந்த லிஜோமோல் ஜோஸ், திடீரென உடல் எடை கூடிவிட்டார். இதுபோல் சில நடிகைகள் பிரச்னைகளில் சிக்கியுள்ளனர். அவர்களை பாடி ஷேமிங் செய்யவே ஒரு கும்பல் அலைந்துகொண்டிருக்கும். லிஜோமோல் ஜோசும் இதிலிருந்து தப்பவில்லை. ஆனால் இதுவரை தன்னை விமர்சித்தவர்களை அவர் பதிலுக்கு விமர்சிக்கவில்லை. இந்த சூழலை அமைதியாகவே அவர் கையாள்கிறார். இதற்காக ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து, வாழ்த்துகிறார்கள். பெண்களுக்கு தைராய்டு உள்பட பல காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. அவர்களை நாம் மதிக்க கற்க வேண்டும் என லிஜோமோலுக்கு ஆதரவாக அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.