Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எல்.கே.அக்‌ஷய் குமாரின் புதிய படம் துவக்கம்

சென்னை: ‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். எல்.கே.விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை விழாவில் இயக்குநர்கள் ஹெச்.வினோத், சிறுத்தை சிவா, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ் வடிவேல், தயாரிப்பாளர்கள் ஆர்.கே. செல்வமணி, டி. சிவா, தனஞ்செயன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், அருண் விஸ்வா, சபரி, விஜய் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.