சென்னை: லண்டனைச் சேர்ந்த டன்ஸ்டன் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய தமிழ்த் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் நிறுவனத்தின் நிறுவனர் துஷாந் கதாநாயகனாக நடிக்கிறார். ‘வட்டக்கானல்’ திரைப்படத்தை இயக்கிய பித்தாக் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார். இவரது திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட தயாரிப்புக் குழு, அவரை இயக்குநராகத் தேர்வு செய்துள்ளது. படத்தை பிரமாண்டமான முறையில், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கான தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
+
