Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லாரி மீது கார் மோதி விபத்து மலையாள நடிகர் சந்தோஷ் கே.நாயர் பலி

திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவர், சந்தோஷ் கே. நாயர் (65). கடந்த 1982ல் ‘இது ஞங்களுடெ கதா’ என்ற படத்தில் அறிமுகமானார். 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், ஹீரோ, காமெடி, குணச்சித்திர வேடங்களிலும் மற்றும் மலையாள டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘மோகினியாட்டம்’ என்ற படம் சூப்பர்ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் சந்தோஷ் கே.நாயர், பத்தனம்திட்டா அருகே தனது மனைவி சுபஸ்ரீயுடன் காரில் சென்றார்.

அடூர் அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லாரியுடன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ் கே.நாயரும், சுபஸ்ரீயும் உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சந்தோஷ் கே.நாயர் பரிதாபமாக இறந்தார். சுபஸ்ரீக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.