Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்

கோடீஸ்வரி ஜியா சங்கரை ஒருதலையாக காதலிக்கிறார், மதும்கேஷ். ஜியா சங்கரோ தனது நண்பர் அர்ஜூன் அசோகனை காதலிக்கிறார். இந்நிலையில், ஸ்காட்லாந்தில் நடந்த விபத்தில் சிக்கிய ஜியா சங்கர், ஞாபக மறதியால் பாதிக்கப்படுகிறார். இதனால், தான் யார் என்றுகூட தெரியாமல் தவிக்கிறார். அப்போது அவரது காதலன் என்று சொல்லி அறிமுகமாகிறார், மதும்கேஷ். அவர் சொன்ன பொய், ஜியா சங்கருக்கு என்னென்ன பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பது மீதி கதை.

காதலை வெளிப்படுத்த முடியாத தவிப்பை இயல்பாக கையாண்டு இருக்கிறார், மதும்கேஷ். ஜியா சங்கர் அளவாக நடித்திருக்கிறார். அர்ஜூன் அசோகன் திடீர் வில்லனாக மாறுகிறார். விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஸ்காட்லாந்துக்கு சென்று வந்த உணர்வை அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு ஏற்படுத்தி இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கூடுதல் பலம். படத்தின் நீளத்தை எடிட்டர் ஆண்டனி குறைத்திருக்கலாம். முக்கோண காதலை புதிய பாணியில் சொல்ல முயற்சித்த இயக்குனர் விஜய், லாஜிக்குகள் பற்றி கவலைப்படாமல், பழைய பாணியிலேயே காட்சிகளை படமாக்கி இருக்கிறார்.