Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்துக்கு ‘யு’

விஜய் இயக்கியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ என்ற படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ், டி-ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளன. பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியாக நடிக்க, மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் நடித்துள்ளனர்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, சரவணன் வசந்த் அரங்கம் அமைத்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்ய, மனோகர் வர்மா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் மார்ச் 6ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். படத்துக்கு சென்சார் குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது.