Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

10 ஆண்டுகளாக பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த நடிகர் கைது: பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் 41 வயது பெண் ஒருவர், அங்குள்ள பல்வேறு திரைப்பிரபலங்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கும் நடிகர் நதீம் கான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அந்தப் பெண்ணிடம் ‘உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று ஆசை வார்த்தை கூறி, நதீம் கான் நெருங்கி பழகியுள்ளார். பின்னர் வெர்சோவாவில் உள்ள தனது வீட்டிலும், அப்பெண்ணின் வீட்டிலும் வைத்து கடந்த 10 ஆண்டுகளாக அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முதலில் வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் சம்பவம் மல்வானி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடங்கியதால், வழக்கு அங்கு மாற்றப்பட்டு நதீம் கான் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். கைது செய்யப்பட்டுள்ள நடிகர் நதீம் கான், சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ என்ற திரைப்படத்தில் அக்லக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.