Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மக்கள் தலைவா விமர்சனம்

மக்கள் நலனுக்கான போராட்டங்கள் என்ற பெயரில் கிடைக்கும் பணத்தை வைத்து, தனது சகாக்களுடன் சொகுசாக வாழ்ந்து வருபவர் ரவிமரியா. அவருக்கு கார்ப்பரேட் முதலாளி ராதாரவி மூலம் ஜாக்பாட் அடிக்கிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டை தொடங்கும் ராதாரவி, முதலில் ரவிமரியாவை தமிழ் படவுலகின் முன்னணி ஹீரோவாக மாற்றுகிறார். பிறகு அவரை தலைவராக வைத்து ‘உள்ேள வெளியே’ என்ற அரசியல் கட்சி தொடங்குகிறார். அதன் பிறகான அதகளமே மீதி கதை.

காமெடி, குணச்சித்திரம், வில்லன் என்று வலம் வந்த ரவிமரியா, இதில் கதையின் நாயகனாக புரமோஷனாகி இருக்கிறார். தனது நக்கலும், நையாண்டியுமான பேச்சால், அரசியல்வாதி கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். படம் முழுக்க தமிழ்குடிமகன் என்ற கேரக்டராகவே மாறி அசத்தியுள்ளார். இப்படத்துக்கு பிறகு தொடர்ந்து கதையின் நாயகனாக அவர் நடிக்கலாம். ராதாரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர்.

அக்னி எஸ்.வருண், பேரரசு, ராம்தேவ், சி.ரங்கநாதன், அக்‌ஷரா விஜய் நன்கு நடித்துள்ளனர். கார்த்திக் எஸ்.நாயரின் ஒளிப்பதிவு, துளசிராமனின் இசை மற்றும் பின்னணி இசை குறிப்பிடத்தக்கது. இன்றைய அரசியல் நிலமையை தைரியமாக சுட்டிக்காட்டிய இயக்குனர் ராம்தேவ், காட்சிகளை இன்னும் கூட அழுத்தமாக சொல்லியிருக்கலாம். எனினும், அரசியல் நையாண்டி படம் என்பதால் சிரிக்கலாம், சிந்திக்கலாம்.