Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாலத்தீவில் மயக்கிய ராய் லட்சுமி

எந்த மொழியிலும் முன்பு போல் பிசியாக இல்லாததால், அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் சென்று, அங்குள்ள நீச்சல் குளத்திலோ அல்லது கடற்கரையிலோ குதித்து, பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு, சோஷியல் மீடியா மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார் ராய் லட்சுமி. தொடர்ச்சியாக கிளாமர் வேடங்களில் நடிப்பதை பற்றி அவரிடம் கேட்டபோது, ‘இன்றைய ரசிகர்கள் எப்படிப்பட்ட படங்களை பார்த்து ரசிப்பார்கள் என்பதை உறுதியாக கணிக்க முடியவில்லை. வெற்றி கொடுத்தாக வேண்டிய சூழ்நிலையில், கிளாமர் என்பது படத்துக்கு கண்டிப்பாக தேவைப்பட்டால் அப்படி நடிக்கிறேன். அதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு ஆதரிக்கின்றனர்.

என் உடல்வாகுக்கு எந்த உடை அணிந்தாலும் அழகாக இருக்கிறது என்று சொல்கின்றனர். இது எனக்கு கிடைத்த கிஃப்ட். சோஷியல் மீடியாவை எனது ரசிகர்களுடன் நான் கலந்துரையாடும் தளமாக பயன்படுத்தி வருகிறேன். என்னை பற்றி நிறைய வதந்திகள் வெளியானது. அந்த தகவல்கள் பொய் என்று சொன்னேன். இப்போது என்னை பற்றி தவறான தகவல் வெளியானால், உடனே அதை எனது சோஷியல் மீடியா மூலம் மறுத்துவிடுகிறேன். எனது திருமணம் எப்போது என்று கேட்கின்றனர். திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று எப்போதுமே நான் சொன்னதில்லை. திருமணம் செய்துகொள்வதற்கான சூழ்நிலை இன்னும் எனக்கு அமையவில்லை. இப்போதும் நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன், யாரையும் காதலிக்கவில்லை’ என்றார். இந்நிலையில், சமீபத்தில் அவர் மாலத்தீவுக்கு சென்று வந்த பிகினி உடை போட்ேடாக்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.