Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சூரியுடன் நடிக்க மமிதா பைஜு மறுப்பா?

சென்னை: காமெடி நடிப்பில் இருந்து விலகி, திடீரென்று கதையின் நாயகனாக மாறி நடித்து வரும் சூரி, தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளதால், தற்போது அதிக கவனத்துடன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ள சூரி, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூரி ஹீரோவாக நடிக்கும் 7வது படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்குகிறார். இது கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை மையப்படுத்தி உருவாகிறது. சூரி ஜோடியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அவர் கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், படக்குழு இதை உறுதி செய்யவில்லை. தற்போது தமிழில் விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, தனுஷுடன் ‘கர’, சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களில் மமிதா பைஜு நடித்து முடித்துள்ளார்.