கொச்சி: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய மலையாளப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ‘ஜோஷ்வா’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் மலையாளப் படம் ஒன்றை இயக்குகிறார். இதன் மூலம் மலையாளத்தில் இயக்குனராகவும் அவர் அறிமுகமாகிறார். இப்படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கோகுல் சுரேஷ், லீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படத்தின் தலைப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
