Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தாமதம்

சென்னை: ‘தக் லைஃப்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் அவரது அடுத்த படத்தில் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. விஜய்சேதுபதி, சாய் பல்லவி முதல் முறையாக இணைந்து நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்குவதாக அறிவித்தார். அதன்படி அதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போது தவிர்க்கமுடியாத காரணங்களால் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்கு படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. அதற்கு மணிரத்னம் இன்னும் முழு திரைக்கதை பணிகளை நிறைவு செய்யாததே காரணமாக சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் லைகா நிறுவனம் சந்தித்து வரும் நிதி நெருக்கடி ஒரு காரணமாக இருக்கும் என்று சொல்கின்றனர்.