Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

சென்னை: மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்க உள்ளனர். சில மாதங்களுக்கு முன் ஒரு மேடையில் பேசிய மணிரத்னம், ‘சாய் பல்லவியின் நடிப்புக்கு நான் ரசிகன்’ என சொல்லியிருந்தார். இந்நிலையில் முதல்முறையாக தனது படத்தில் அவரை நடிக்க வைக்க இருக்கிறார். இது முழுநீள காதல் கதை கொண்ட படமாக உருவாகிறது.

‘செக்க சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்கிறார். இந்தியில் ‘ராமாயணம்’, ‘ஏக் தீன்’, தமிழில் தனுஷுடன் ஒரு படம், பிரபாசுடன் ‘கல்கி 2’ ஆகிய படங்களில் நடிக்கும் சாய் பல்லவி, ஜூன் முதல் மணிரத்னம் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.