சென்னை: பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே விழாவில் மலையாள நடிகர் திலீப், நடிகை மஞ்சு வாரியர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை மஞ்சு வாரியரை காதலித்து மணந்தவர் திலீப். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், நடிகை காவ்யா மாதவனுடன் திலீப்புக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதையடுத்து திலீப்பை மஞ்சு வாரியர் பிரிந்துவிட்டார். இதற்கிடையே பிரபல நடிகை ஒருவரை கும்பல் பலாத்காரம் செய்த வழக்கில் திலீப் சிக்கினார். இந்த வழக்கு ஒரு புறம் நடக்கும்போது, காவ்யா மாதவனை 2வதாக திலீப் மணந்துகொண்டார்.
இந்த சூழலில் தான் பல ஆண்டுகளுக்குப் பின் மஞ்சு வாரியர் மற்றும் திலீப் ஒரே விழாவில் கலந்துகொண்டது மலையாள சினிமாவில் கவனம் பெற்றுள்ளது. கொச்சியில் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் தியேட்டர் திறப்பு விழாவில் இருவரும் தனித்தனியே வந்தனர். வழக்கமாக திலீப் பங்கேற்கும் விழாக்களில் மஞ்சு வாரியர் பங்கேற்பதில்லை. இந்த நிலையில் தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு திலீப்பும் மஞ்சுவும் ஒரே நிகழ்ச்சிக்கு வந்திருந்தது கவனம் பெற்றது. அவர்கள் ஒரே நேரத்தில் வரவில்லை என்றாலும் தியேட்டரில் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தது இதுவரை இல்லாத ஒரு காட்சியாக இருந்தது. மஞ்சு வாரியர் அமர்ந்திருந்த அதே வரிசையில் கொஞ்சம் தொலைவில் திலீப் அமர்ந்திருந்தார். இருவர் வருவதையும் பெரிய திரையில் அடுத்தடுத்து காண்பிக்கப்பட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
