சென்னை: இந்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர், மன்னாரா சோப்ரா. தமிழில் ‘சண்டமாருதம்’, ‘காவல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் கருப்பு நிற உடையணிந்து, பிரபல பஞ்சாபி பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி, ‘நீங்கள் ஏற்கனவே ஒரு பிராண்டாக இருக்கும்போது, ஏன் லேபிளை தேட வேண்டும்?’ என்ற வாசகத்துடன், கவர்ச்சி நடன வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், ஏராளமான ரசிகர்கள் அவரது கவர்ச்சி நடனத்தை பாராட்டி கருத்து தெரிவித்தனர்.
ஆனால், சில ரசிகர்கள் மன்னாரா சோப்ராவின் குண்டான உடல் தோற்றத்தை கடுமையாக விமர்சித்தனர். நெட்டிசன்கள் சிலர், ‘நீங்கள் ஏன் இவ்வளவு குண்டாக தெரிகிறீர்கள்?’ என்றும், ‘நீங்கள் இப்போது மிகவும் பருமனாக இருக்கிறீர்கள்’ என்றும், ‘ஜிம்முக்கு சென்று தீவிரமாக உடற்பயிற்சி செய்யுங்கள். இது உருவகேலி அல்ல. உங்கள் மீதான ஒரு ரசிகரின் அக்கறை’ என்றும் தொடர்ந்து பதிவிட்டு, அவரை உருவகேலி செய்ய ஆரம்பித்தனர்.
கடந்த 2025ல் பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, இதுபோன்ற கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் உருவகேலிக்கு ஆளாகியிருப்பது பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
