Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மரகத மலை விமர்சனம்...

பரம்பரை, பரம்பரையாக மரகத மலையின் கீழே வசித்து வரும் ஒரு ஜமீன் குடும்பம், தங்கம் மற்றும் வைரங்கள் அடங்கிய புதையலை ஒரு ரகசிய இடத்தில் வைத்து பாதுகாத்து வருகிறது. அதை கைப்பற்ற வரும் மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க தனது மனைவி, மகனை காட்டுக்குள் அனுப்புகிறார் ஜமீன்தார். திரும்பி வந்து பார்க்கும்போது மனைவி, மகனை காணவில்லை.

பிரிந்த குடும்பம் சேர்ந்ததா? புதையலின் கதி என்ன ஆனது என்பது மீதி கதை.ஜமீனாக வரும் சந்தோஷ் பிரதாப், கம்பீரமான தோற்றத்தில் மிரட்டுகிறார். அவரது மனைவி தீப்ஷிகா அழகு மற்றும் நடிப்பில் அசத்துகிறார். அஷ்டமா சக்திகளை பெற நினைக்கும் மந்திரவாதி சம்பத் ராம், அவர் உத்தரவிட்ட பணிகளை செய்யும் பூதங்களாக தம்பி ராமய்யா, ஜெகன், சந்தோஷ் பிரதாப்பின் சிறுவயது மகன் மகித்ரா, வளர்ந்த நிலையில் வரும் சிறுவன் சஷாந்த், சிறுவர்கள் அரிமா வர்மன், கலைக்கோவர்மன் ஆகியோர் நன்கு நடித்துள்ளனர்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு சிறப்பு. எல்.வி.முத்து கணேஷின் இசை, பாரம்பரிய தன்மையுடன் ஒலிக்கிறது. எழுதி இயக்கி தயாரித்துள்ள எஸ்.லதா, முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்துள்ளார். பல படங்களில் பார்த்த சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். ஃபேண்டசி மாயாஜால காட்சிகள் குழந்தைகளை கவரும்.