சென்னை: டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் எழுதி இயக்கும் படம், ‘மேரிகோல்ட்’. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பின்னணியில் நடக்கும் இக்கதையில், முக்கிய வேடங்களில் ரக்ஷன், நம்ரிதா நடிக்கின்றனர். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தனது 21வது படைப்பாக இதை அறிவித்துள்ளது. சுதர்சன் இணைந்து தயாரிக்கிறார்.
பிரபு, சுகன்யா நடிக்கிறார்கள். தவிர சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின், வடிவேல் முருகன் நடிக்கின்றனர். மல்லிகார்ஜூன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசை அமைக்கிறார். ஆர்.நிர்மல் எடிட்டிங் செய்ய, சஞ்சய் விஜய் ராகவன் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார். ஜி.துரைராஜ் அரங்கம் அமைக்க, எம்.தீபு நடனப்பயிற்சி அளிக்கிறார். அபிஷேக் சீனிவாசன் சண்டைக்காட்சி அமைக்கிறார்.
