Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

47 வயதில் திருமணம் செய்தார் பாகுபலி நடிகர்

ஐதராபாத்: ‘பாகுபலி’ நடிகர் சுப்பராஜு, தனது 47 வயதில் நேற்று திருமணம் செய்துள்ளார். ‘பாகுபலி’ படத்தில் அனுஷ்கா மீது ஆசை கொண்டு வீரனைப் போல் நடிப்பார் இளவரசரான சுப்பராஜு. பிரபாஸ் தான் செய்யும் வீர செயல்களையெல்லாம் இவர்தான் செய்தார் என சுப்பராஜுவை கைகாட்டுவார். அதுபோன்ற காமெடி வேடங்களில் நடித்த சுப்பராஜு, பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

தமிழில் விஜய் நடித்த ‘ஆதி’, ‘போக்கிரி’, ஜெயம் ரவி நடித்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, சிம்பு நடித்த ‘சரவணா’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்த இவர், நேற்று திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ‘எங்களை வாழ்த்துங்கள்’ என பதிவிட்டிருந்தார்.