Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஊடகத்துக்கு பதிலடி கொடுத்த அமிதாப்

இந்திய திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், பாலிவுட்டின் ‘ஷஹென்ஷா’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கடந்த 57 வருடங்களாக திரையுலகில் நீடித்து நிலைத்து வரும் அவர், கடந்த மாதம் 29ம் தேதி தனது சமூக வலைத்தளத்தில், கிருஷ்ணர் பிரார்த்தனை ஒன்றை பதிவு செய்திருந்தார். ‘உங்கள் யானைகளை கொண்டு வாருங்கள். நாங்களும் கொண்டு வருகிறோம்’ என்று அதில் கூறியிருந்தார். அதற்கு ஒரு ஊடகம், ‘யானைகளையும், குதிரைகளையும் கொண்டு வரும்படி எதிரிகளுக்கு அமிதாப் பச்சன் சவால் விடுக்கிறார்’ என்று எழுதியிருந்தது. இதனால் கடும் கோபமடைந்த அமிதாப் பச்சன், பதிலுக்கு ஆவேசத்துடன் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், ‘யானைகளை கொண்டு வர சொல்வது, கிருஷ்ணர் பிரார்த்தனையின் ஒரு வடிவம். ஆனால், தனது சொந்த விளம்பரத்துக்காக அந்த ஊடகம் எனது வார்த்தைகளை திட்டமிட்டு திரித்து வெளியிட்டுள்ளது. இது, கிருஷ்ணர் பிரார்த்தனைக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஊடக நிறுவனம் தனது காதை திறந்து கேட்டுக்கொள்ளட்டும். எனக்கு சமூக வலைத்தளத்தில் 5 கோடி பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். திருப்பி அடிக்க அவர்களில் 10 சதவீதம் பேர் போதும். அவர்கள் எனது சிக்னலுக்காக காத்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.