Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீனாட்சியை மயக்கிய கார் டிரைவர்

கென் கருணாஸ் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்து வெற்றிபெற்ற படம், ‘யூத்’. இது தெலுங்கில் வெளியாகியுள்ளது. மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்த மீனாட்சி தினேஷ் கூறுகையில், ‘கடவுளுக்கும், எனது பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றி. ரசிகர்களிடம் எனக்கு கிடைத்த அன்பும், ஆதரவும் உற்சாகத்தை அளித்துள்ளது. இன்று ‘கேப்’ டிரைவர் கூட என்னை, படத்தின் கேரக்டர் பெயர் வைத்து அழைத்ததை கேட்டு பெருமையாக இருந்தது. அதுதான் உண்மையான வெற்றி என்று நினைக்கிறேன். பல வருடங்களாக நான் நடித்து வந்தாலும், ஒரு நல்ல அடையாளம் இப்போதுதான் கிடைத்துள்ளது.

படக்குழுவினருடன் கடைசிவரை நல்ல நட்பில் இருந்தேன். 2023ல் தொடங்கிய எனது திரைப்பயணம் இப்போது வெற்றிபெற்றுள்ளது. அன்று முதல் இன்றுவரை என்னை நம்பிய இயக்குனர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி’ என்றார். சுராஜ் வெஞ்சரமூடு கூறும்போது, ‘கென் கருணாஸ் ஒரு நடிகர் மட்டுமல்ல, மிகத்தெளிவான இயக்குனரும் கூட. அவரது தீவிரமும், அர்ப்பணிப்பும்தான் இந்த வெற்றிக்கு காரணம். இன்னும் பல பெரிய உயரங்களை அவர் அடைவார் என்று நம்புகிறேன். மலையாளத்தில் இருந்து வந்துள்ள எனக்கு தமிழ் கற்றுக்கொள்ள உதவி செய்த அனைவருக்கும் நன்றி’ என்றார்.