11 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்த மீரா ஜாஸ்மின்
திருமணத்துக்கு பிறகு திரையுலகை விட்டு விலகியிருந்த மீரா ஜாஸ்மின், திடீரென்று தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 4ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் ‘தி டெஸ்ட்’ என்ற படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோருடன் இணைந்து அவர் நடித்துள்ளார். இதை ஒய்நாட் ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் தயாரித்து இயக்கியுள்ளார்.
தேசிய கிரிக்கெட் பிளேயர், விஞ்ஞானி, ஆசிரியர் ஆகியோரின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. கடந்த 2014ல் ‘விஞ்ஞானி’ என்ற படத்தில் நடித்திருந்த மீரா ஜாஸ்மின், 11 வருடங்களுக்கு பிறகு ‘தி டெஸ்ட்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார்.
