மிடில் கிளாசில் கதைதான் ஹீரோ: முனீஷ்காந்த் நெகிழ்ச்சி
சென்னை: ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி, குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் தேவ், ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி பாஸ்கர், இணைத் தயாரிப்பாளர் குட் ஷோ கே.வி.துரை, இயக்குனர்கள் ரவிகுமார், ஏ.ஆர்.கே. சரவணன், ராஜூமுருகன், சுப்ரமணியம் சிவா, ஏ.வெங்கடேஷ் உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது, “கிஷோர் சார் என்னிடம் நீங்கள்தான் ஹீரோ என்றார். நான் முடியாது என்றேன். கதை கேட்டபிறகுதான் தெரிந்தது கதைதான் ஹீரோ என்று. உடனே ஒத்துக்கொண்டேன். இயக்குனர், தயாரிப்பாளர்கள், எடிட்டர், இசையமைப்பாளர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு நான் எதிர்பாராத பெரிய சம்பளம் டில்லி பாபு சார் கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்து விட்ட டில்லி பாபு சார் போன்ற பல தயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு தேவை’’ என்றார்.
