Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அம்மாவின் கனவை நிறைவேற்றிய சைத்ரா ஆச்சார்

சமீபத்தில் திரைக்கு வந்த ‘மீசைய முறுக்கு 2’ என்ற படத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மனைவி லட்சுமி என்ற மாறுபட்ட கேரக்டரில் நடித்தவர், சைத்ரா ஆச்சார். இப்படத்தின் மூலம் தனது அம்மாவின் கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இப்படத்தில் எனது கணவருக்காக தைரியமாக குரல் கொடுப்பவள், லட்சுமி. எது வேண்டும் என்பதில் அவள் மிகவும் உறுதியாகவும், வெளிப்படையாகவும் இருப்பாள். இந்த கேரக்டரில் நான்தான் நடிக்க வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக இருந்தனர். இது எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது.

எனது முந்தைய படங்களின் பாடல்கள் பெரும்பாலும் ‘மாண்டேஜ்’ காட்சிகளாகவே இருந்தன. இப்படத்தில் எனக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. உண்மையில் இப்படத்தை பார்க்க என்னைவிட எனது அம்மா அதிக ஆர்வமாக இருந்தார். காரணம், எனக்கு ஏன் யாரும் டான்ஸ் ஆடும் வாய்ப்பை வழங்குவது இல்லை என்று அவர் அடிக்கடி கேட்பார். இப்போது எனது அம்மாவின் கனவு நனவாகி இருப்பதை நினைத்து அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளேன்’ என்றார்.