Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் தாயான சோனம் கபூர்

பாலிவுட் நடிகை சோனம் கபூர், இந்தியில் தனுஷ் ஜோடியாக ‘ராஞ்சனா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. கடந்த 2018ல் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்த சோனம் கபூர், பிறகு திரையுலகை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில், கடந்த 2022ல் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி, அதற்கு ‘வாயு கபூர் அஹுஜா’ என்று பெயரிட்டார்.

இதையடுத்து 2வது முறையாக கர்ப்பம் அடைந்த சோனம் கபூர், கடந்த மார்ச் 29ம் தேதி 2வது ஆண் குழந்தைக்கு தாயானார். தனது மகனை அணைத்தபடி போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவருக்கு திரையுலகினரும் மற்றும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்தவர்களுக்கு சோனம் கபூர் நன்றி தெரிவித்துள்ளார். அவரது நன்றியுணர்வை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.