இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதல் திருமணம் செய்த சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், ‘தற்போது நான் தாய்மை அடைந்திருக்கும் காலத்தை முழுமையாக அனுபவித்து வருகிறேன். இதுவரை 11 கிலோ உடல் எடை அதிகரித்துள்ளேன்.
இந்த அனுபவம் எனக்கு எதிர்பாராவிதமாக அதிக வலிமையையும், அதிகார உணர்வையும் தருகிறது. நான் இவ்வளவு வலிமை பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. பெரும்பாலும் திக்குமுக்காடி தவிப்பேன் என்றுதான் நினைத்திருந்தேன்’ என்றார்.
