Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

படத்துக்கு ஹீரோவால் வந்த பிரச்னை: டார்க் ஹெவன் விழாவில் தனஞ்செயன் தகவல்

சென்னை: அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் சித்து, தர்ஷிகா , ரித்விகா நடித்திருந்தனர். பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன.

படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, நடிப்புக் கலைஞர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார், ஆர்த்தி, சுமித்ரா, பிரதீப், விவேக், செல்வா, மனோஜ், அலெக்ஸ், டேனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, ‘படத்தின் பல காட்சிகள் உருவான பிறகு படத்தில் நடிக்கும் ஹீரோ பிரச்னை செய்வது பெரிய சிக்கலை உண்டாக்கும். அதுபோல்தான் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நடந்துள்ளது. அந்த படத்தை ஒதுக்கிவிட்டு, புதிதாக இந்த படத்தை எடுத்து ஜெயித்திருக்கிறார்கள்’’ என்றார். விழாவில் இயக்குனர், ஹீரோவுக்கு தலா 5 சவரன் செயினை தயாரிப்பாளர் பரிசாக வழங்கினார்.