Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மிருணாள் தாகூருக்கு பதிலாக ருக்மிணி

தற்போது வெற்றிமாறன் இயக்கும் ’அரசன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதில் போலீஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு, அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்துவிட்டது. சிம்பு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு, இறுதியில் ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. முக்கிய கேரக்டரில் சந்தானம் நடிப்பதை அஷ்வத் மாரிமுத்துவும், சிம்புவும் ஏற்கனவே உறுதி செய்திருந்தனர்.

சிம்பு, சந்தானம் கூட்டணி பல வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சந்தானத்துக்கு ஹீரோவுக்கு நிகரான சம்பளம் கொடுக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. முன்னதாக ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தை தமிழிலும், தெலுங்கிலும் எழுதி இயக்கியிருந்த அஷ்வத் மாரிமுத்து, பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ என்ற படத்தை எழுதி இயக்கினார். இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. தற்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் மிருணாள் தாகூர் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில், அவருக்கு பதிலாக ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.