Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மிருணாள் தாக்கூருடன் ஈகோ பிரச்னையா? பூஜா ஹெக்டே பதில்

சென்னை: மிருணாள் தாக்கூருடன் நடித்தபோது ஈகோ பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்து பூஜா ஹெக்டே பதிலளித்தார். அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியில் ஹே ஜவானி இஷ்க் ஹோனா ஹே படத்தில் வருண் தவன், மிருணாள் தாக்கூர் ஆகியோருடன் சேர்ந்து பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.

படம் குறித்து பூஜா ஹெக்டே கூறும்போது, ‘‘மிருணாள் தாக்கூர் ரொம்பவே ஸ்வீட். அவருடன் படத்தில் நடிக்கும்போது எந்த ஈகோவும் ஏற்படவில்லை. எங்களிடையே நல்ல புரிதல் இருந்தது’’ என்றவர், ‘‘திரையுலகினரை வாழ வைப்பது ரசிகர்கள்தான். சூழ்நிலை காரணமாக, சில மேடைகளில் ரசிகர்களை கண்டுகொள்ள முடியாமல் போகிறது. அதற்காக நாங்கள் கெத்து காட்டுகிறோம் என்று அர்த்தமில்லை. உண்மையிலேயே ரசிகர்கள் எங்கள் கடவுள்’’ என கூறியுள்ளார்.