Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எம்.எஸ். சுப்புலட்சுமி கதை படம்: சாய் பல்லவி போனார் ருக்மிணி வசந்த் வந்தார்

சென்னை: தமிழில் ‘ஏஸ்’, ‘மதராஸி’, ‘காந்தாரா: சாப்டர் 1’ ஆகிய படங்களில் நடித்துள்ள ருக்மிணி வசந்த், தெலுங்கில் பிரசாந்த் நீல் எழுதி இயக்கும் ‘டிராகன்’ என்ற படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கிறார். யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சீனியர் கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தை கவுதம் தின்னனூரி இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் எம்.எஸ்.எஸ் கேரக்டரில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அவர் கால்ஷீட் இல்லை என்று கறாராக சொல்லிவிட்டதால், உடனே படக்குழுவினர் ருக்மிணி வசந்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘சப்த சாகரதாச்சே எல்லோ-சைட் ஏ’ என்ற கன்னட படத்தில் ருக்மிணி வசந்தின் அசத்தலான நடிப்பை பார்த்து வியந்த கவுதம் தின்னனூரி, உடனே அவரை எம்.எஸ்.எஸ் கேரக்டருக்கு தேர்வு செய்தார். இசைக்கும், பாடலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.