தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

இசையில் இருந்து ரஹ்மான் ஓய்வா: மகள் கதீஜா பதில்

சென்னை: இசை அமைப்பதிலிருந்தும் இசை நிகழ்ச்சிகளில் இருந்தும் ஏ.ஆர்.ரஹ்மான் ஓய்வு பெற உள்ளார் என்ற தகவலுக்கு அவரது மகள் கதீஜா பதில் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இசை படைப்பாளியாக இருக்கிறார். உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவது, புதிய பாடல்கள் உருவாக்குவது என பிசியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மனைவி சாயிரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது பற்றி சில சர்ச்சைகளும் தொடங்கியது. ஆனால் அதை குடும்பத்தினர் மறுத்தனர்.

பொய் செய்தி பரப்பியவர்கள் எல்லோரையும் எச்சரித்தனர். இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதில் இருந்து ஒரு வருடத்திற்கு பிரேக் எடுக்கப்போகிறார் என ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் பரவியது. அதை ரஹ்மானின் மகள் கதிஜா மறுத்து இருக்கிறார். ‘ஏன் இப்படி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறீர்கள்’ என அவர் டிவிட்டரில் கோபமாக கேட்டிருக்கிறார்.