Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இசை ரசிகர்களை வசப்படுத்திய அன்னக்கிளியே

சென்னை: இசை கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ எனும் மியூசிக் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை அனிருத்தின் இசை நிறுவனமான அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் சார்பில் வெளியிட்டு, அவர் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். ‘அன்னக்கிளியே நீ வரும் வழியே தள்ளாடிப் போகுதே மனமே...’ எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் தீக்ஷிதா எழுதி பாடியிருக்கிறார்.

இவருடன் இசையமைப்பாளர் ஸ்மித் ஆஷர் இணைந்து பாடியிருக்கிறார். இந்த பாடலுக்காக நடிகர் பவன் அலெக்ஸ் மற்றும் நடிகை பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பாடலுக்கான வீடியோவை விக்கி பப் இயக்க, ஜே சரோலா ஒளிப்பதிவு செய்ய, தீஜோ பரத்வாஜ் தயாரித்திருக்கிறார்.

இப்பாடலை அனிருத் அவருடைய பிரத்யேக யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அனிருத் - அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் - ஸ்மித் ஆஷர் கூட்டணியில் உருவான ‘அன்னக்கிளியே’ இண்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் இசை ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் லட்சக்கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று இணையவாசிகளின் வரவேற்பை பெற்று இருக்கிறது.