Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு கட்டிடம்: நிதி திரட்ட மாபெரும் இசை நிகழ்ச்சி

சென்னை: தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் பல வருட கனவு, சென்னை வடபழநி கமலா தியேட்டருக்கு அருகிலுள்ள தங்களது இடத்தில், சொந்த கட்டிடம் ஒன்றை அமைத்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து முடிவெடுத்து, மாயாபஜார் ஹப் என்ற நிறுவனத்தை அணுகி, அதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் மற்றும் டிரஸ்ட்டுக்கு சொந்தமான இடத்தில் மாபெரும் வணிக வளாகம் அமைத்து, அதில் திரையுலக பயன்பாட்டுக்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்க முடிவெடுத்து இருக்கின்றனர்.

அதற்கான 10 மாடி கட்டிடத்தை கட்ட, தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசை நிகழ்ச்சிகளை சென்னை, ஐதராபாத், குஜராத், சிங்கப்பூர், துபாய் ஆகிய பகுதிகளில் நடத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தில் சொந்த கட்டிடத்துக்கான பணிகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். முதல் நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் சென்னையில் பிரமாண்டமான முறையில் நடக்கிறது. இதற்காக, தமிழக அரசிடம் அனுமதி பெற சங்கத்தை சேர்ந்தவர்கள் முயற்சித்து வருகின்றனர்.