Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

13ம் தேதி வெளியாகிறது ‘மை லார்ட்’

சசிகுமார், சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குனர் கோபி நயினார், எழுத்தாளர் வசுமித்ர நடித்துள்ள படம், ‘மை லார்ட்’. ராஜூ முருகன் எழுதி இயக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்க, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்ய, முனி பால்ராஜ் அரங்கம் அமைத்துள்ளார்.

எம்.ஷெரீப் நடனப் பயிற்சி அளிக்க, பி.சி ஸ்டண்ட்ஸ் குழு சண்டைக் காட்சி அமைக்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார். அம்பேத்குமார் வழங்கும் இப்படத்தை ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் வெளியிடுகிறது. ஏழை மக்கள் மீது நடக்கும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன் படமாக்கப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி படம் திரைக்கு வருகிறது.