தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மைனா போல் வெள்ளக்குதிர: விதார்த் ஆருடம்

சென்னை: நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 54 விருதுகள் வென்றுள்ளது. சிறந்த நடிகருக்கு 26, படத்திற்கு 23, சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஐந்து என பெற்றுள்ளது..

இவ்விழாவினில், பாக்கியராஜ், ஆர்.கே. செல்வமணி, தனஞ்செயன், டி.சிவா, இயக்குனர் ஆர். வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் அஜயன் பாலா, குகன், நடிகர் விதார்த், தயாரிப்பாளர் ஜெயபிரகாஷம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.. விதார்த் பேசுகையில், ‘‘வெள்ள குதிரயை தாண்டி இந்த படத்தின் கதாநாயகனான ஓரிக்கும் எனக்கும் உள்ள நட்பு முறையை பற்றி பேசலாம்னு இருக்கேன்..

பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில் இருந்து எனக்கு ஓரி அறிமுகம். கூத்துப்பட்டறை நண்பர்களை தாண்டி வெளியில் எனக்கு நண்பர்கள் கிடையாது அப்படி வெளியில் இருக்கும் ஒரே நண்பர் ஓரிதான்.. அவன் எனக்கு முக்கியமான நண்பன் அவன் வீட்டிற்கு போய் வெளியில் வந்த நேரத்தில் எனக்கு மைனா படம் கிடைத்தது. மைனா படம் போல் இந்த படமும் சிரமப்பட்டு எடுத்திருக்காங்க. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’’ என்றார்.