Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மிஷ்கினை ‘சைக்கோ’ என்று நினைத்து நடிக்க மறுத்தேன்: விஜய் சேதுபதி ‘கல கல’ பேச்சு

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் `ட்ரெய்ன்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, மிஷ்கின் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்தபோது, மிஷ்கின் நடத்திய ஆடிஷன்களுக்கு சென்றிருக்கிறேன். நான் ஹீரோவாகி வெற்றிபெற்ற பிறகு என்னை அழைத்தார். ஆனால், அவரை பார்க்க ‘சைக்கோ’ மாதிரி இருந்ததால், டேட் இல்லை என்று மறுத்துவிட்டேன். மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ படத்தை பார்த்த பிறகு அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

லவ் யூ மிஷ்கின். ஒரு படத்தை பிடித்துவிட்டால், அந்த இயக்குனருக்கு போன் செய்து, நான் புரிந்துகொண்டது சரிதானா என்று பேசுவது வழக்கம். அதுபோல் மிஷ்கினிடம் அடிக்கடி பேசுவேன். ‘சைக்கோ’ படத்தை பார்த்துவிட்டு, அவரை நேரில் சந்தித்து 8 மணி நேரத்துக்கு மேல் பேசினேன். அப்போது வாட்ச் ஒன்றை பரிசளித்தார். திரையுலகில் நான் சம்பாதித்த அன்பை விட அதிகமாக மிஷ்கின் சம்பாதித்துள்ளார்.

அதனால்தான் அவரை எல்லோரும் கொண்டாடுகின்றனர். மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு 2’ படத்தில் நடித்தேன். இப்போது ‘ட்ரெய்ன்’ வரை எங்கள் நட்பு நீடிக்கிறது. ‘ட்ரெய்ன்’ திரில்லர் படமாக இருக்கலாம். படப்பிடிப்பில் எங்களுக்கு இது ரொமாண்டிக் பயணமாக, மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. தயாரிப்பாளர் தாணு, வரும் ஆகஸ்ட்டில் படத்தை ரிலீஸ் செய்வதாக சொன்னதற்கு மிகவும் நன்றி.