Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம்

சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கரண் குமார் இயக்குகிறார். படத்தின் ஹீரோயின் மற்ற நட்சத்திரங்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. துருவ் விக்ரம் நடிக்கும் 4வது படம் இது. அதேபோல் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் 4வது படமாகும்.

இதற்கு முன் தமிழில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’, பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘டியூட்’ படங்களை தயாரித்த இந்நிறுவனம் இப்போது மூன்றாவதாக ‘மொத ராத்திரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து இப்படத்தை தொடங்குகிறது. இப்படத்தின் துவக்க விழா, பூஜையுடன் நேற்று துவங்கியது. இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.