Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நாகார்ஜூனாவின் நாற்பது வருட ஞாபகங்கள்

தெலுங்கு முன்னணி ஹீரோ நாகார்ஜூனா, கடந்த 23ம் தேதியுடன், நடிக்க வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்தது. 1986ல் தெலுங்கு ‘விக்ரம்’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் பெற்றுக்கொண்ட அனைத்து ஆசிர்வாதங்களுக்கும், அன்புக்கும் நன்றி. மே 23ம் தேதியை எப்போதும் மறக்க முடியாது. எனது புகழ்பெற்ற தந்தை ஏடித நாகேஸ்வர ராவ் நடித்த இறுதிப் படமான ‘மனம்’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட பெருமை பெற்ற தினம் இது.

எனது தந்தையுடனும், எனது மகன்களுடனும் (நாக சைதன்யா, அகில் அக்கினேனி) சேர்ந்து பணியாற்றிய பாக்கியம் பெற்ற படம். பல வருடங்களுக்கு முன்பு மே 23ம் தேதி, எனது முதல் படமான ‘விக்ரம்’ என்ற படத்தை வெளியிடும் வாய்ப்பை எனக்கு அளித்தது. ரசிகர்களை மகிழ்விக்கும் வாய்ப்பை மற்றும் அவர்களின் அன்பையும், ஆசிர்வாதத்தையும் பெறும் வாய்ப்பை தந்தது. இத்தனை வருடங்களாக என்னுடன் உறுதியாக நின்ற அனைவருக்கும் நன்றி. இன்னும் பல மே 23ம் தேதிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றார்.