Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

புதுமுகங்களின் கிரைம் திரில்லர் படம்

சென்னை: ஸ்ரீஸ்வர்ணலட்சுமி மூவிஸ் சார்பில் கொடைக்கானல் ஆர்.ராஜேந்திரன் தயாரித்துள்ள கிரைம் திரில்லர் படம், ‘தி ஐ 3’. குரு பிரகாஷ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ரோஷன், சந்தியா, ரமேஷ், மாலி, சுஜி, ஸ்ரீ, சாய் கோபி, லோகேஷ் நடித்துள்ளனர். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜீவா வர்ஷினி இசை அமைத்துள்ளார்.

காதல்மதி பாடல்கள் எழுத, சி.எஸ்.பிரேம் குமார் எடிட்டிங் செய்துள்ளார். விமல் நடனப் பயற்சி அளிக்க, ரவிராஜ் சண்டைக் காட்சி அமைத்துள்ளார். முத்துக்குமார் வசனம் எழுதியுள்ளார். செல்வ சத்யா, ரஞ்சிதா இணை தயாரிப்பு செய்துள்ளனர். மேகமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், சின்னமனூர், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.