Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பனி விழும் இரவு

சென்னை: அறிவியலின் அபரித வளர்ச்சியால், சமூக வலைதளங்களின் வாயிலாக இன்று இளைய தலைமுறையானது எந்த அளவு பாதிக்கப்படுகிறது என்பதை மையமாக வைத்து பனி விழும் இரவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. படத்திற்கு பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார் சதா.முருகன். படத்தின் இயக்குனர் - செ. ரா. ராஜேஷ், ஒளிப்பதிவு - ஜெயக்குமார் தங்கவேல், படத்தொகுப்பு - செல்வா, பின்னணி இசை - பாசில், கதாநாயகனாக அருண் கார்த்திக்,

நாயகியாக எனாக்ஷி கங்குலி, முக்கிய வேடங்களில் சரவணசக்தி, சேரன்ராஜ், கருப்பு நம்பியார், கஜராஜா, உறியடி நந்தா, சுருளி, வினோத் குமார்,நேத்ரா, ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது. படம் பற்றி இயக்குனர் கூறும்போது,இதுவரை இந்தியத் திரையுலகில் சொல்லப்படாத ஒரு கதையை இயக்கியுள்ளதாகக் கூறுகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.