Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டிகே இயக்கத்தில் நித்யா மேனன்

சென்னை: இயக்குனர் டி கே இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார். ஃபேண்டஸி மற்றும் டார்க் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை வி.எஸ். ராஜ்குமாரின் லியோ விஷன் நிறுவனமும், நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் விக்ரம் கே. குமார் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இவர் தமிழில் யாவரும் நலம், சூர்யா நடித்த 24 படங்களையும் தெலுங்கில் மனம், குஷி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்த பெயரிடப்படாத திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பற்றிய கூடுதல் தகவல்களையும், இதில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தின் டைட்டில் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.