Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஓ பட்டர்ஃபிளை விமர்சனம்...

காதலன் சிபி சந்திரனை பிரேக்அப் செய்த நிவேதிதா சதீஷ், அந்த விஷயத்தை மறைத்து, அதுல் நாசரை திருமணம் செய்துகொண்டு ஊட்டிக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராமல் சிபி சந்திரனை சந்திக்கிறார். மீண்டும் அவர்களுக்குள் காதல் அரும்பி சில நிமிடங்களில் மறைகிறது. இதையறிந்த சிபி சந்திரனின் நண்பர் அதுல் நாசர், நிவேதிதா சதீஷை டார்ச்சர் செய்கிறார்.

இதனால் மனநிலை பாதிக்கப்படும் நிவேதிதா சதீஷ் என்ன செய்கிறார் என்பது மீதி கதை. கனமான கேரக்டரைப் புரிந்துகொண்டு சிறப்பாக நடித்துள்ள நிவேதிதா சதீஷுக்கு விருது தரலாம். வில்லனாக சிபி சந்திரனும், சந்தேகப்பேர்வழியாக அதுல் நாசரும் கச்சிதமாக நடித்துள்ளனர். ரிசார்ட் பணியாளராக, பட்டர்ஃபிளை நேசராக நாசர் இயல்பாக நடித்துள்ளார். கீதா கைலாசம் கைரேகை பார்த்து பலன் சொல்வது திருப்புமுனைக்கு உதவுகிறது.

வைசாக் சோமநாத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு மெருகூட்டியுள்ளது. ஊட்டியின் அழகை புதிய கோணத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார், வேதாராமன் சங்கரன். சிங்-சவுண்ட் நேர்த்தியாக இருக்கிறது. மருத்துவம், அறிவியல், தத்துவம் கலந்து எழுதி இயக்கிய விஜய் ரங்கநாதன், படத்தின் நீளத்தைக் குறைத்து, சொல்ல வந்த கருத்தை எளியமுறையில் சொல்லியிருக்க வேண்டும்.