திரைக்கு வந்த ‘ரங்கூன்’, ‘அமரன்’ ஆகிய படங்களுக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் பான் இந்தியா படம், ‘ஓம்’. இதில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கின்றனர். இது தனுஷ் நடிக்கும் 55வது படம். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா நடிக்கிறார்.
சாய் அப்யங்கர் இசை அமைக்கிறார். இப்படம் வரும் 16ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அதில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’, சூர்யாவின் ‘சீன்’ ஆகிய படங்கள் திரைக்கு வருவதையொட்டி, ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ‘ஓம்’ படம் வரும் நவம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
