Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எனக்காக ‘ஓம்’ ரிலீசை மாற்றிய தனுஷுக்கு நன்றி: சூர்யா பேச்சு

சென்னை: ஜித்து மாதவன் இயக்கிய ‘சீன்’ என்ற படத்தில் சூர்யா, நஸ்ரியா நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசை அமைத்துள்ளார். வரும் 6ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சூர்யா உருக்கத்துடன் பேசியதாவது: எனது வாழ்க்கையில் நான் எடுக்கும் ஒவ்வொரு நல்ல முடிவுக்கும், சரியான பாதையில் பயணிப்பதற்கும் என் மனைவி ஜோதிகாவின் வழிகாட்டுதலே முக்கிய காரணம். அவர் ஒரு சிறந்த தாய், நல்ல தோழி மற்றும் வலிமையான வாழ்க்கை துணையாக இருக்கிறார். என் வாழ்க்கையின் மிகப்பெரிய பலமே ஜோதிகாதான்.

கடந்த 29 வருடங்களாக என்னை ரசிகர்கள் இந்த மேடையில் நிறுத்தி அழகு பார்ப்பதற்கு நன்றி. எனக்கு எப்போதும் வாரி வழங்கிய சினிமாவுக்கு திருப்பி ஏதாவது செய்யும் ஒரு முயற்சியாக, ஜோதிகாவுடன் இணைந்து புதிய படைப்பாளிகளை உருவாக்க, ‘ழகரம் ஸ்டுடி யோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இங்கு தனுஷுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவரது டிவிட் ஒன்றில், எனது படம் தீபாவளிக்கு வெளியாவதால், தனது ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைப்பதாக கூறியிருந்தார். அதற்கு எனது நன்றி.