Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வாய்ப்புகளை டாப்ஸி மறுக்கும் மர்மம்

பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் டாப்​ஸி, பாலிவுட்​டில் பெண் கதாபாத்​திரங்​களுக்கு முக்​கி​யத்​து​வம் கொண்ட ‘பிங்க்’, ‘முல்க்’, ‘தப்பட்’ போன்ற படங்​களில் நடித்​து, தனக்​கென்று ஒரு இமேஜை ஏற்படுத்தியுள்ளார். அவர் நடித்​த ‘காந்​தா​ரி’, நெட்​பிளிக்ஸ் தளத்​தில் நேரடி​யாக வெளி​யாகிறது. இந்நிலையில் அவர் கூறுகையில், ‘திரைத்​துறை​யில் ஈடுபட்ட பலர், தங்​கள் பாதுகாப்பு வட்​டத்​துக்​குள் இருந்தபடி, ஏற்​கனவே வெற்றி பெற்ற முறை​யையே மீண்​டும், மீண்​டும் பின்​பற்றுகின்​றனர். கிளாமர் கேரக்டருக்கு என்​றால் சில நடிகைகளை​யும், சமூக பிரச்​னை​களை மைய​ப்படுத்திய படங்​கள் என்றால் சில நடிகைகளை​யும் முதல் ​முடி​வாக தீர்மானித்து வைத்​துள்ளனர்.

இதற்​காகத்​தான் பல வாய்ப்​பு​களை நான் மறுத்துவிடு​கிறேன். சில கதைகளை கேட்​கும்​போது, படத்​தின் முடிவு எளி​தில் யூகிக்கக்கூடியதாக இருந்​தால், ‘என்னை இதில் நடிக்க வைக்​காதீர்​கள். இது அந்த படத்​துக்கே பாதக​மாக முடி​யும்’ என்று வெளிப்​படை​யாக சொல்லிவிடுவேன். எனது திரையுலக பயணத்தின் தொடக்​கத்​தில் இருந்தே வணிகரீதி​யான மற்​றும் எளிமை​யான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்​பு​கள் எனக்கு கிடைக்​க​வில்​லை. அதுபோன்ற கேரக்டர்கள் நடிகைகளுக்கு எளி​தில் லாபத்​தை​யும், பிரபல​த்தை​யும் தரக்​கூடிய​வை. அது கிடைக்​காத​ நிலையில் வேறொரு பாதையை தேர்வு செய்தேன். எனது நல்ல நேரமோ என்னவோ, நான் நடித்த அந்​த படங்​கள் எல்லாம் திரையுல​கின் முக்​கிய படைப்​புகளாக மாறிவிட்டன’ என்றார்.