Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வட தமிழகத்தின் கதை தோற்றம்

சென்னை: இள பரத் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் இளங்கோ சினி கிரியேஷன்ஸ் வழங்கும் ‘தோற்றம்’. படத்தின் நாயகியாக வசுந்தராவும் முக்கியமான கதாபாத்திரத்தில் பருத்தி வீரன் சரவணனும் நடித்துள்ளனர்.

இப்படத்தினை ஏ. தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் . முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார். நல்லதம்பி இசையமைத்துள்ளார். பி.இளங்கோவன் தயாரித்துள்ளார். ‘தோற்றம்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் மோகன் ஜி கலந்து கொண்டு பேசும்போது, ‘வட தமிழ்நாடு குறித்து இப்பொழுதுதான் சினிமாக்கள் வர ஆரம்பித்துள்ளன. ‘லப்பர் பந்து’ ஜெயித்த பிறகு மிகப்பெரிய சந்தோஷம் வந்துள்ளது. வட தமிழ்நாடு பற்றி நிறைய படங்கள் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ இவ்வாறு இயக்குநர் மோகன் ஜி பேசினார். முன்னதாக விழாவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் வெளியிட்டார்.விழாவில் இயக்குநர் பேரரசு, தோற்றம் படத்தின் தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.