Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஓடிடியில் நேரடியாக வெளியான 'அனலி' திரைப்படம் !

தயாரிப்பாளர் சிந்தியா லூர்டே தயாரிப்பில் உருவான 'அனலி' திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண் கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் சிந்தியா லூர்டே, சக்தி வாசு, கபீர் துஹான் சிங், இளங்கோ குமாரவேல், ஜென்சன் திவாகர், அபிஷேக் வினோத், இனியா சலாஹுதீன், அசோக் பாண்டியன், மேத்யூ வர்கீஸ் மற்றும் வினோத் சாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூகப் பின்னணியுடன் விறுவிறுப்பான திரை அனுபவத்தை வழங்கும் 'அனலி' திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் பார்வையாளர்களுக்காக கிடைக்கிறது.